Thursday, September 22, 2011

ஒரே ஒரு ஓலை

ஒரே ஒரு ஓலை

'கைத்தலம் பற்றி'
என் கரம் பற்றிய
ஒரு மணி நேரத்தில்...
என்னை ஒருமனப்படுதியமந்திர புத்தகம்!

வேகம் உன் பேச்சு
விவேகம் உன் செயல்
வைராக்கியம் உன் நெஞ்சு
வறட்சியின் வைத்தியமே
உன் வரிகள்...

கூண்டுக்குள் சிக்காபறவை நீ
....சிறகை வெட்டி எரிந்தாலும்
சிறகடிக்கும்அதிசயம் நீ...
உன் சிரிப்புக்கும், சினுங்களுக்கும்,
சினத்துக்கும் கூட
கவிதை உருவெடுக்கும்
போல் தெரிகிறது..

நீ ஜான்சி ராணியா?
விஜயசாந்தியா?
இல்லை கவிதை கிறுக்கியா?

நீ கசக்கி எறிந்த
காகிதங்களில்
கூடபல கவிதைகள் உறங்கியிருக்கிறது..
.உன் கண்களில் மிதக்கும் கனவுகள்
உன் சரித்திர புத்தகங்களின் கதவுகள்...

இப்படிக்கு,
உன் கவிதை சாற்றை
ஒரு கிண்ணம் அருந்தி
மறுக்கின்னம் எடுப்பதற்குள்முழுமையடைந்தவள்..
அங்கயற்கண்ணி

No comments:

Post a Comment