"கைத்தலம் பற்றி" -பத்திரிக்கைகள் மற்றும் இணையதளங்களின் பார்வையில்
பாலிமர் தொலைகாட்சியில் கைத்தலம் பற்றி விமர்சனம்
இலக்கியப் படைப்புகளில் மிகக் கடினமான வடிவம் கவிதை . மொழி ஆளுமையும் ,கவித்தனமையும் கொஞ்சம் குறைந்தாலும் அது கவிதையாக இருக்காது . ஒரு நான்கு வரிக் கவிதை எழுத அத்தனை மெனக்கிடுவார்கள் கவிஞர்கள். "கைத்தலம் பற்றி " என்ற இந்நூலில் ஒரு நெடுங்கதையை கவிதை வடிவில் செதுக்கி தந்திருக்கிறார் வே.பத்மாவதி . ஒரு ஆணின் பார்வையில் தொடங்குகிறது இந்நூல் .
"அவள் இதழ் பிறந்த முதல் சொல் என் இதயம் பிளந்த கூரிய வேல் " ஆரம்பமே அமர்க்களமாகி விடுகிறது .
கவிதைக்குள் நம்மை ஆழ்ந்துப் போக செய்து விடுகிறது . நாயகனின் மன ஓட்டதிற்க்குள் நாமும் மெல்ல நழுவி உள்ளே போய் விடுகிறோம் . திருமணமாகியும் ஒட்டாமல் தள்ளித் தள்ளி போகும் மனைவி . காரணம் புரியாமல் தவிக்கும் கணவன் . அவன் நல்லவனாக இருப்பதால் அவளை சகித்துக் கொள்கிறான் . இந்தச் சூழ்நிலையை நூல் ஆசிரியர் . இப்படி பதிவு செய்கிறார்
"மனைவி வாடகைக்கு இடம் கேட்கிறாள் இதயத்தில் அல்ல இல்லத்தில் " அதேபோல சர்வ சாதரணமாக உணர்ச்சி கொப்பளிக்கும் வரிகளை சொல்லிச் செல்கிறார் பத்மாவதி .
" நெருப்பின் காயம் ஆற்ற நேற்று அறிவியல் மருந்து தந்தது இதயத்தின் இடம் மாற்ற இன்றைய அறிவியல் மருந்து தந்தது . நெஞ்சின் நினைவினை மாற்ற நாளைய அறிவியலில் மருந்து தாருங்களேன் ."
ஆண் பெண் இருவரின் மன ஓட்டங்களும் இதில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன . பொருக்கி எடுத்த வார்த்தைகள் . அயர்வுறச் செய்யாத நடை . அசாத்தியமான கற்பனை வளம் எல்லாம் சேர்ந்துக் கொள்ள இக்கவிதை நூலை விறுவிறுவென படித்து விட முடிகிறது . பொதுவாக கவிதை மரபில் கவிதையை கதையாகச் சொல்லும் போது அதை காவியம் என்பார்கள் . அந்த அடிப்படையில் இது ஒரு நவீனக் காவியம் தான் . ஆனால் அணிந்துரை முன்னுரை எல்லாம் சேர்த்து மொத்தமே எண்பது பக்கத்திற்குள் முடிந்து விடுகிறது .இன்னும் கொஞ்சம் விரிவாக கொண்டு சென்றிருக்கலாம் என்ற எண்ணமும் நமக்கு ஏற்படுகிறது . இன்றைக்கு அச்சு ஊடகத் துறையின் வளர்ச்சி பல நல்ல கவிஞர்களை இனம் காட்டியுள்ளது . அவர்களில் ஒருவர் பத்மாவதி
மனதின் சுழற்சிக்கேற்ப கவிதையின் சுழற்சி அமைகிறது .கவிதை இல்லாத உலகம் காற்று இல்லாத மயானங்களின் கல்லறை தான் . சகோதரி வே.பத்மாவதி அவர்களின் "கைத்தலம் பற்றி" எனும் கவிதை தொகுப்பை முழுவதுமாக வாசித்தேன் .கவிதையின் கால்தடங்களில் வாழ்வின் யதார்த்தத்தை ரசித்தேன் .
கவிஞர் பா.விஜய்
புதிய பார்வை விமர்சனக் குழு
காதல் சமூகம் ,இயற்க்கை என சகல தளங்களும் இயங்கும் அடர்த்தியான கவிதைகள் அடங்கிய தொகுப்பு .
"எரிகின்ற வயிறுக்காய் சரிகின்ற மாராப்புகள்"
"உறவுகளிடம் உண்மை மறைக்கலாம் உணர்வுகளிடம் ?" இப்படி நிறைய சாட்டையடி நறுக்குகள் தொகுப்பு நிறைய
"இல்லை என்பது இதழா இடையா "
"தலைக்கு தரையை வைத்து "
"வரும் வழி மறக்கலாம் வாழும் வழி மறந்தால் ?"
"ஆலமரத்தின் வேர்களாக அடிமனதில் படர்ந்திருந்தாய் "
"இட்லி இதழ்களை பிய்த்து தாமரை இதழுக்கு கொடுத்து "
என்பன போன்ற கவித்துவத்திர்க்கும் பஞ்சமில்லை . இது தான் தொகுப்பின் ஹைலைட் எனலாம் .எளிமையான அழகான தொகுப்பு.
எழுத்தின் அலங்காரம் கவிதைகள் என்று சொல்லலாம் . புதுக்கவிதைகளை புதிய தளத்திற்க்கு கொண்டு சென்றுள்ளார் வே. பத்மாவதி . "இந்த வேருக்கு நீர் இல்லை " ,நதியில் பூத்த நந்தவனம் " போன்ற கவிதைகள் நன்று .
வார்ப்பு நூலகம் பகுதியில் இருந்து
தினமலர் இணையத்தளத்தில் இருந்து